மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன...!

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன...!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முழுமையாக இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் மூன்று பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அதன் பணிகள், கடந்த 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், மேல் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலையுடன் தளர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் அரசாங்க அலுவலகங்களுக்கு பதிவு செய்யப்பட்ட கடிதங்களை விநியோகிக்கும் பணிகளை நாளை மறுதினம் முதல் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.