தனிமைப்டுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 7 பேர் கைது
உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசேட அதிரடிப்படை மற்றும் வான்படை இணைந்து நடத்திய மேற்படி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்