பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கான அறிவிப்பு

பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கான அறிவிப்பு

பூசா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட கைதியொருவர் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் காலி சிறைச்சாலையிலிருந்து 30க்கும் மேற்பட்ட கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.