அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு!

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு!

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு! | 17 Old Boy Was Killed In An Accident In Kathankudi

இந்நிலையில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுக்கின்றனர்.