மாமனாரை திருமணம் செய்ய கணவனை கொலை செய்த மனைவி

மாமனாரை திருமணம் செய்ய கணவனை கொலை செய்த மனைவி

இந்தியாவில் பீகார் அவுரங்காபாத் பகுதியில் 55 வயதான மாமனாரை திருமணம் செய்ய 20 வயது இளம்பெண், கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25வயதுடைய கணவரே இந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு  திருமணமாகி 45 நாட்கள்தான் ஆகிறது. 

இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கணவனை கொலை செய்துள்ளனர்.

மாமனாரை திருமணம் செய்ய கணவனை கொலை செய்த மனைவி | Wife Kills Husband To Marry Father In Law

தகவலறிந்த பொலிஸார் குறித்த பெண்ணையும் மற்றும் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாகி உள்ள மாமாவை தேடி வருகின்றனர்.

மேலும் விசாரணையில், திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்ததோடு, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், பெண்ணின் பெற்றோர் அதை விரும்பாமல் கட்டாயப்படுத்தி,  இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

மாமனாரை திருமணம் செய்ய கணவனை கொலை செய்த மனைவி | Wife Kills Husband To Marry Father In Law

இதையடுத்து தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து வாழ இந்த பெண் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, தனது தங்கை வீட்டிற்குச் சென்றுவிட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவர், நவிநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அப்போது மனைவியை தொடர்புகொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரையேனும் அனுப்பும்படி கேட்டுள்ளார்.

பின் வீட்டை நோக்கி புறப்பட்ட கணவரை, திடீரென இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.