சட்டப்பூர்வ அனுமதியில்லை - பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அமைச்சரின் அறிவிப்பு

சட்டப்பூர்வ அனுமதியில்லை - பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அமைச்சரின் அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளில் பணம் வசூலிப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தால் எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணம் அறிவிடுதால் மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாணவர்களிடையே பணம் வசூலிப்பது நீண்ட காலமாக ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தொகைகள் முன்னர் கணக்கிடப்பட்டன. தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பாடசாலைகளில் பணம் வசூலிப்பதற்கு எந்த சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை.

சட்டப்பூர்வ அனுமதியில்லை - பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அமைச்சரின் அறிவிப்பு | Government Not Allow Collect Money In Schools

சில குழுக்கள் அல்லது தனிநபர்களின் பணம் கோருதல்கள் காரணமாக ஒரு மாணவர் சிரமத்தை எதிர்கொண்டால் மாணவர்களின் நலனில் தலையிட அதிகாரம் உள்ளது.

அதேநேரத்தில், தன்னார்வ அடிப்படையில் பாடசாலைகளுக்கு உதவும் குழுக்கள் அல்லது பெற்றோரிடமிருந்து தன்னார்வ பங்களிப்புகளைத் தடுக்கவும் முடியாது. இதுவரை, இந்த விஷயத்தில் அமைச்சுக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.