இன்றைய ராசி பலன் 2 அக்டோபர் 2026

இன்றைய ராசி பலன் 2 அக்டோபர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சில குடும்ப வேலைகள், தொழில் தொடர்பாக அவசரமான சில பணிகளை செய்ய வேண்டிய நிலை இருக்கும். என்ற அவசரப்படுவதை விட, திட்டமிட்டு செயல்பட முயலவும். இன்று அரசாங்க ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதிநிலை தொடர்பாக தெளிவான சிந்தனையுடன் செயல்படவும். சேமிப்பு திட்டம், குடும்ப வரவு செலவு திட்டமிடவும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். இல்லையெனில் குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் தொந்தரவு தரும். சிலருக்கு கழுத்து, தொண்டை தொடர்பான வலி தொந்தரவுகள் ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கும். நெருக்கடியான காலத்தில் சக ஊழியர்களின் நம்பகத்தன்மையும், ஆதரவும் கிடைக்கும். நீண்ட கால நிதி திட்டங்கள், முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்களுக்கு விருப்பமான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். அதிக வேலைப்பளு காரணமாக சோர்வாக உணர்வீர்கள். இந்த சில உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய திறமை, புதிய ஆலோசனை பிறரை திரும்பிப் பார்க்க வைக்கும். சிலருடைய தொடர்புகள் உங்களுடைய நிலுவையில் உள்ள செயல்பாடுகளை முடிக்க உதவும். புதிதாக பெரிய முயற்சிகளை தொடங்குவதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள நல்ல திட்டங்களை பயன்படுத்துவது நன்மை தரும். இன்று சில நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். கடன் தொடர்பான சிக்கல் ஏற்படும். அதனால் வரவு செலவுத் திட்டங்களை கவனிக்க வேண்டியதனால். காதல் விஷயத்தில் உங்களுடைய பழைய நினைவுகள் அல்லது ஆழமான உணர்வுகள் வெளிப்படும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று குழுவாக செய்யக்கூடிய பணிகளை முன்னேற்றத்தை காண்பீர்கள். வேலை, தொழில் தொடர்பாக உங்களுடைய தொடர்புகளின் வலை பின்னல் உங்களுக்கு உதவும். கூட்டு விவாதம் கடினமான சூழ்நிலை தீர்க்க உதவும். இன்று உங்களுடைய யோசனைகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும். குழு பணிகள். நீண்ட காலத் திட்டங்களுக்கான நிதி வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். இன்று செரிமானம் தொடர்பான சிரமங்கள் ஏற்படும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் விவகாரங்களில் உங்களுடைய தலைமை பண்பு மற்றும் பொறுப்புகள் சரியாக நிறைவேற்ற முடியும். இன்று நடைமுறை சிக்கல்களை உணர்ந்து துணிச்சல் உடன் செயல்படுவீர்கள். நிதி நிலையில் ஒழுக்கத்துடன் செயல்படவும். புதிதாக ஒரு பொருளை வாங்கும் விஷயத்தில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வாங்கவும். இல்லையெனில் அவற்றை தவிர்ப்பது நன்மை தரும். வேலை, தொழில் சொந்த வாழ்க்கையில் கொண்டு வருவதை தவிர்க்கவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உடனடி வெற்றிக்காக, லாபத்திற்காக குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். நீண்ட காலம் பலன் தரக்கூடிய திட்டங்களில் ஈடுபடவும். உயர்கல்வி, வேலை தொடர்பான விஷயங்களுக்காக பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உங்களுடைய நிதி திட்டமிடல் அதிகளவில் சேமிக்க உதவும். உணவுப்பூர்வமாக பண முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய பிள்ளைகளின் கல்வி, ஓய்வூதியம் நிதிகள், நீண்ட கால சேமிப்புகள் போன்ற விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும். நிதி விவகாரங்களில் முன்னேற்றத்தை காண முடியும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும், நிதி விபரங்கள், முக்கிய ஆவணங்களை பராமரிப்பு போன்றவை ரகசியமாக வைக்கவும். இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய பணிகள், கூட்டு முயற்சிகள் சிரமங்களை தந்தாலும், வெற்றி கிடைக்கும். இன்று ஊக வணிகம் அல்லது ஆபத்து நிறைந்த முதலீடுகளை தவிர்க்கவும். இன்று காதல் துணையின் உணர்வுகளை மேலோட்டமாக தெரிந்து கொள்வது சிக்கலில் தீர்க்க உதவாது. நேர்மையான மற்றும் ஆழமான உணர்வுபூர்வமான நம்பிக்கை தேவைப்படும். இன்று கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தனிப்பட்ட தொழில் முறை உறவுகள் முக்கியத்துவத்தை பெறும். இன்று வேலை,தொழில் தொடர்பாக பொறுமையான நடவடிக்கை, பேச்சு சூழலை மேம்படுத்து உதவும். இன்று எதிலும் அதிக எதிர்பார்ப்புகளை தவிர்க்கவும். உங்களுடைய வெளிப்படை தன்மை காதலில் மகிழ்ச்சியான சூழ்நிலை தரும். இன்று உங்களுடைய நிதிநிலை ஊக்கமளிக்க கூடியதாக இருக்கும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய செயல்களிலும், முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தடைபட்ட செயல்கள் முடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு சிரமங்கள் தரக்கூடிய சில புதிய பொறுப்புகள் ஏற்க நேரிடும். இன்று உங்களுடைய அன்றாட செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். சொற்களை திடீரென வாங்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். காதல் விஷயத்தை விட்டுக்கொடுத்து செல்லவும். உங்களுடைய துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் சிக்கல் ஏற்படலாம். உங்கள் வேலைகளை முடிப்பதில் ஆரோக்கியம் தொடர்பாக சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய படைப்பாற்றலும், முயற்சிகளும் வெற்றியை தரும். உங்களுடைய புதிய யோசனைகளுக்கு சரியான வடிவம் கொடுத்து செயல்படுவோம். பணியிடத்தில் மேலதிகாரிகள் அல்லது வழிகாட்டிகள் இடமிருந்து ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய ஒழுக்கமிக்க செயல்பாடுகள், நிதிநிலை சீராக உதவும். இன்று அபாயகரமான வேலை அல்லது முதலீடுகளை தவிர்க்கவும். காதல் உணர்வுகள் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ளவும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வீட்டு பொறுப்புகள், சொத்து தொடர்பான விஷயங்களில் நீங்கள் மேற்கொள்ள கூடிய முயற்சிகள் வெற்றியை தரும். இன்று அலுவலகப் பணிகளில் அவசரப்படாமல் திட்டமிடலும், தேவையான ஆலோசனையை மேலதிகாரிகளிடம் பெற்று செயல்படுவது நன்மை தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மற்றும் உங்களுடைய மனநிலை மீட்டு சூழ்நிலை சமாளிக்க சிரமத்தை தரலாம். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இன்றும் உங்களுடைய உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், கல்வி அல்லது ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். உங்களுடைய உறவு வலிமை அடையும். காதல் விஷயத்தில் மனப்பூர்வமான பேச்சு நெருக்கத்தை அதிகரிக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு உங்கள் விருப்பம் போல சுவாரசியமான துணை கிடைக்கும். உங்களுடைய உறவு வலிமை அடையும். உங்களுடைய செலவுகளை திட்டமிட வேண்டிய நாள். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு காய்ச்சல், சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தரலாம்.