இன்றைய ராசி பலன் 26 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 26 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் சாதகமான நிலையில் இருப்பதோடு, ஐந்தாம் வீட்டில் ஏற்படும் பாதிப்பால், உங்கள் குழந்தைகளிடமிருந்து ஏமாற்றம் தரும் செய்திகள் வரலாம். இன்று உங்களுடைய கடின உழைப்பிற்கு பின்னர் மாலை நேரத்தில், நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். இரவு நேரம் அன்புக்குரியவர்களைச் சந்திப்பதிலும் மகிழ்ச்சியாகக் கழிப்பதிலும் அமையும். ஆரோக்கியம் தொடர்பாக சிறு சிறு தொந்தரவுகள் தோன்றும் மறையும். மேலும் நீங்கள் எதிர்பாராத சில செலவுகள் சமாளிக்க வேண்டியது இருக்கும். மனதில் சஞ்சலங்களா குழப்பங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அனுகுலம் ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகள் மூலம் சில நிம்மதியான சூழல் உருவாகும்.மனதளவில் சில குழப்பங்களுக்கு பின்னர் தெளிவு கிடைக்கும். இன்று உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுப காரியம் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உடல் நலன் மேம்படக்கூடிய நாள். உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக சில சலுகைகள் அல்லது வாய்ப்புகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றகரமான சூழல் இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், அவர்களுடன் நிதானமான அணுகுமுறையை கடைபிடிப்பது அவசியம். இன்று ஆபத்தான முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி தொடர்பாக இருந்த குழப்பமான நிலை விலகும். உங்கள் நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நல்ல மாற்றங்களை காண்பீர்கள். வேலை, வியாபாரம் தொடர்பான பயணங்கள் கல்ல நேரிடும். அது தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உங்களுடைய மாறுபட்ட சிந்தனை, இழுபரியாக இருந்த பணிகளை சரியாக செய்து முடிக்க உதவும். உங்களுடைய தொழில்நுட்ப அறிவால் பயனடைவீர்கள். குடும்ப விவகாரத்தில் அதிக பணம் செலவிட நேரிடலாம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அரசு தொடர்பான விஷயங்களில் மதிப்பு மரியாதை கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் விருப்பங்களையும் நிறைவேற்றுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய பயணங்களில் பயனுள்ளதாகவும், சௌகரியமாக இருக்கும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான திட்டமிடுவீர்கள். தொழில், வேலை தொடர்பாக இருக்கும் கடின உழைப்பின் முழு பலனை அனுபவிக்க முடியும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வரக்கூடியதாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான. வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இன்றைய கிரகநிலை உங்களுக்கு புதிய வருமான வழிகளை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய இனிமையான பேச்சு, குடும்பத்திலும் பணியிடத்திலும் மரியாதை பெற்று தரும். எதிரிகளை சிறப்பாக சமாளிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான அணுகுமுறை தேவைப்படும். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலை தொடர்பான சில தாமதங்கள் ஏற்படலாம். இன்று புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு நல்ல மாற்றங்களை மற்றும் வாய்ப்புகளை உண்டாக்கும். நண்பர்கள் வழியில் அனுகூல அதனைப் பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் இலக்குகளுடன் ஒரு வலுவான தொடர்பை உணர்வீர்கள். உங்கள் நிதி முன்னுரிமைகளை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள் உங்கள் பாதையை வலுப்படுத்தும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவைப் பெற உதவும். வேலை தொடர்பான முடிவுகளில் தனிப்பட்ட உணர்வுகள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

 

 

உங்கள் புரிதல், அலுவலகச் சூழலை நன்கு புரிந்துகொள்ள உதவும். பணியிடத்தில் உங்கள் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும். உடனடித் தீர்வுகளைக் காண வேண்டும் என்ற அழுத்தத்தை உணர வேண்டாம். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும், ஆனால் அமைதியாக வேலை செய்வது நல்லது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் உங்களுடைய சூழலில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்கள் ஆக தொடர்ந்து வந்த பிரச்சனைகள் விலகும். பண பரிவர்த்தனை விஷயங்களில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் தீரும். இன்று நீங்கள் திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப் போகும் வாய்ப்பு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல உறவு ஆழமடையும். இன்று எங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை தரும். குடும்பத்தை விட்டு தொலைவில வாசிக்க கூடியவர்கள் மீண்டும் அவர்களுடன் இணைய வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையும் ஆதரவு மன தைரியத்தை தரும். மேலும் குடும்பத்தில் ஒருவரின் முன்னேற்றம் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை கொண்டு வரும். உங்களுடைய கற்பனை திறன் அதிகரிக்கும். அறிவியல் துறை, ஆராய்ச்சி போன்ற விஷயங்களில் சிந்தனை உடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பாக எதிர்பாராத நல்ல உதவிகள் கிடைக்கும். உங்கள் மனதில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களை விலக்கி, மன தைரியத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் நினைத்த சில முக்கிய பணிகளை நிறைவேற்ற தாமதம் ஏற்படலாம். இன்று உங்களுடைய உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறது. மேலும் நீங்கள் சில சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். பயணங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் உங்களுக்கு ஏற்ற விதத்தில் சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். உங்களுடைய தொழில் மற்றும் வருமானம் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் இருக்கக்கூடிய தன்னம்பிக்கை, கடினமான பணிகளை செய்து முடிக்கவும், முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் உதவும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் கை கூடும். வியாபார தொடர்பான போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். இன்று கர்ம ஸ்தானத்தில் உள்ள சூத்திரங்களுக்கு சாதகமான பலனை தருவார். தொழிலில் முன்னேற்றமும், வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் தரும். பணியிடத்தில் சாதகமான மாற்றங்களை காண்பீர்கள்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி பலன்

உங்களுடைய உடல் நலம் மற்றும் மன நலனை பாதுகாக்க வேண்டிய நாள். வரவுக்கு ஏற்ற செலவுகளும் ஏற்படும். இன்று உங்களுடைய சேமிப்பு, முதலீடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபரியான செயல்களை சரியாக செய்து முடிக்க முடியும். வியாபாரம் தொடர்பாக லாபகரமான சூழல் ஏற்படும். உங்களுடைய பேச்சுத் திறமையால் புதிய வாய்ப்புகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்கள் செலவுகள் மற்றும் ஏதேனும் பொருட்கள் வாங்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்த வேண்டும். விரும்பத்தகாத செய்தியைக் கேட்பது உங்களை திடீர் பயணம் மேற்கொள்ளத் தூண்டலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத் தலங்களுக்குச் செல்வதிலும், அறப்பணிகளைச் செய்வதிலும் செலவுகள் ஏற்படலாம். பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள். குருவின் முக்கோணச் சேர்க்கை மதிப்புமிக்க பொருட்கள் திருடப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு பாதிக்கப்படலாம்.

உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவான் இப்போது நேர்கதியில் பயணிக்கிறார். இது ஆதாரமற்ற வாக்குவாதங்கள், தேவையற்ற பகை, உங்கள் சொந்தப் புத்திசாலித்தனத்தில் மந்தநிலை மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கலாம். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த பட்ஜெட் போட்டு செயல்படவும்.