இன்றைய ராசி பலன் 24 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 24 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பயனுள்ள சில தொடர்புகள் கிடைக்கும். நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய நபர்களுக்கு வேலை தொடர்பாக சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகம் தொடர்பாக இப்படி ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களுடைய ஆலோசனையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இன்று உங்களுடைய செலவுகளை சமாளிக்க கூடிய நிலையில் இருக்கும். அதே சமயம் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்களுடைய எதிர்கால வாழ்க்கை தொடர்பான விவாதங்கள் காதலில் நெருக்கத்தை அதிகரிக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக உணர்வீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தொழில் தொடர்பான முக்கிய விஷயங்கள் நடக்கும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டங்கள் மூலம் சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கப்பெறலாம். நீண்ட கால இலக்கங்களை அடையும் வித விதமான சில தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அல்லது வியூகத் திட்டங்களை மேம்படுத்த மேம்படுத்த நினைப்பீர்கள்.

 

உங்களுடைய நிதிநிலை சமாளிக்க அவசர முடிவுகளை தவிர்க்கவும். இன்று நீங்கள் கடன் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். வேலை தொழில் தொடர்பான அர்த்தங்களால் உங்கள் துணையுடன் நேரம் செலவிட முடியாது நிலை ஏற்படலாம்.. இருப்பினும் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். வர்த்தகம் தொடர்பான சில ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். இன்று அனுபவம் வாய்ந்த நிதி ஆலோசகர்களின் ஆலோசனை கிடைக்கும். ஊகத்தின் பெயரில் எந்த ஒரு முடிவையும் இருப்பதை தவிர்க்கவும். பண முதலீடு தொடர்பாக முழு ஆராய்ச்சி செய்த பின்னர் ஈடுபடுவது நல்லது. இன்று காதல் விஷயத்தில் இனிய பேச்சு மற்றும் கருத்து பகிர்வு சுவாரசியமானதாக இருக்கும். இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலையில் விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களை பெறுவது, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன், அதன் ஆவணங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். சிலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். கூட்டுநீதி பராமரிப்பு மற்றும் முதலீடு தொடர்பாக கவனம் தேவை.

 

வீட்டின் தேவை மற்றும் பழுது பார்ப்பு தொடர்பாக செலவுகள் அதிகரிக்கலாம். முதலீடு மற்றும் கடன் வாங்கும் விஷயங்களை தவிர்க்கவும். இன்று பிறரின் உணர்வுகளை மதித்து செயல்படவும். கடினமான சூழலை தவிர்ப்பதற்கு பதிலாக அதை எதிர்கொள்ள தயாராகுங்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தொடர்பான திட்டமிடல், வாடிக்கையாளர் சந்திப்பு, வணிகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய கடின உழைப்பும் மற்றும் உழுக்குத்துடன் செயல்படுவது உங்கள் திறனை நிரூபிக்க உதவும். உங்களுடைய செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயலவும். காதல் அல்லது குடும்ப வாழ்க்கையில் உங்கள் துணையின் மன உணர்வுகளையும், அவர்கள் பேசுவதையும் செவி சாய்ப்பதால் உறவு வலுவடையும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பொழுதை திட்டமிடுவதும், ஒழுங்கமைப்பதும் மனதிற்கு ஆற்றலை தரும். தீர்க்கப்படாத சில பிரச்சனைகள் அல்லது வேலைகள் முடிக்க முடியும். இன்று உங்களுடைய நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்கும் விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வரவு செலவு திட்டங்களுடன் செயல்பட வேண்டிய நாள். பெரிய முதலீடு செய்வதற்கு முன் அதன் விவரங்களை சரி பார்க்கவும். காதல் விஷயத்தில் உங்களுடைய அக்கறை அர்த்தமுள்ளதாக இருக்கும். இன்று உங்களுடைய சிறிய மாற்றம் அல்லது புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமா சிந்தனை உங்களுக்கு வேலையில் சிறப்பாக செயல்படவும், தொழிலில் நல்ல வாய்ப்புகள் பெற உதவும். இன்று உங்களுடைய பகுப்பாய்வு சிந்தனை சில மோசமான விஷயங்களை தவிர்க்க உதவும். நிலையற்ற நிதி சந்தைகளில் அவசரப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். முதலீடு மற்றும் வரவு செலவுகளை மறுசீரமைக்க முயல்வீர்கள். இன்று திருமண வாழ்க்கையில் துணையுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும். துணையுடன் சேர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு நெஞ்செரிச்சல், உடல் சூடு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய கவனமான செயல்பாடு தவறுகளை தடுக்கவும், ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்ய உதவும். சொத்து அல்லது நிலம் வாங்குவது தொடர்பான விஷயங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்பத்தில் சிறிய கருது வேறுபாடுகள் ஏற்படலாம். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விட்டுக்கொடுத்து செல்லவும். இன்று சில விஷயங்களால் உங்களுக்கு மன அழுத்தம், உடல் இறுக்கம் ஏற்படலாம். காதல் தொடர்பாக மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிட, சில நல்ல ஆலோசனை பெறுவது என சாதகமான நாளாக நகரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தகவல் தொடர்பு திறன் மற்றும் ஊக்கத்துடன் கூடிய செயல்பாடு நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய வேலை தொழில் தொடர்பான பயணங்கள், புதிய வாய்ப்புகளை பெற்றுத்தரும். உங்களுக்கு சில புதிய கூட்டாளிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களின் விடாமுயற்சி மற்றும் புதிய திட்டங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிப்படையான உரையாடல் மற்றும் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்வதால் உறவு வலுவடையும். இன்று சுவாரஸ்யமான நாளாக அமையும். சிலருக்கு கழுத்து, மேல் முதுகு பகுதிகளில் வலி ஏற்படலாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாள். அதே சமயம் உங்கள் பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். அவசரத்தில் பேசுவது அல்லது முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுடைய குடும்ப செலவுகள் அதிகரிக்கலாம், இருப்பினும் நீங்கள் எதிர்பாராத விதத்தில் சில வருவாய் உங்களுக்கு நிதி நிலையை சமாளிக்க உதவும். இது உங்கள் காதல் துணைக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். உறவு வலிமை அடையும். இன்று ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய அதிகாரம் மற்றும் தலைமைத்துவம் அதிகரிக்கும். வழக்கத்திற்கு மாறாக சிறப்பான யோசனை உடன் செயல்படுவீர்கள். மனம் மற்றும் உடலளவில் ஆற்றல் நிறைந்திருக்கும். இன்று புதிய திட்டங்களுடன் செயல்பட்டால் நன்மை அதிகரிக்கும். புதிய நிதி சார்ந்த யோசனைகள் உங்களை ஈர்க்கும். இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன் அது குறித்து முழுமையாக ஆராயவும். இன்று அபாயகரமான வேலை அல்லது முதலீடுகளை தவிர்க்கவும். இன்று சரியான அளவு உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுப்பது, சரியான நேரத்தில் தூங்குவது அவசியம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை விட, திரைக்குப் பின்னால் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய நாள். ஒவ்வொரு பணிகளையும் ஆராய்ந்து, நிதானமாக மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதனுடைய நாள். இன்று நீங்கள் எதிர்பாராத சில வேலைகள் உங்கள் திட்டங்களை பாதிக்க வாய்ப்பு உண்டு. உடல் நலம் சார்ந்த செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் உங்கள் துணையுடன் நேரம் செல்ல விட வாய்ப்பு கிடைக்கும். இது துணையுடன் மீண்டும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.