இன்றைய ராசி பலன் 19 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 19 செப்டம்பர் 2026

மேஷ ராசி பலன்

மேஷ ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை தொடர்பான திட்டமிட சிறந்த நாள். நீண்ட காலத் திட்டங்கள், புதிய விஷயங்களை கற்பதற்கு ஆர்வத்துடன் இருப்பீர்கள். வேலை தொடர்பான உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று பணியிடத்தில் தன்னம்பிக்கையுடன் உங்களுடைய யோசனைகளை முன்வைக்கவும். ஒப்பந்தங்கள், உங்களுக்கான இலக்குகள் தொடர்பான உங்கள் பணிகளை சரி பார்க்கவும். உங்களுடைய நிதி நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். சேமிப்பு தொடர்பான இலக்குகளை நிர்ணயத்தை செயல்படவும். செலவுகளை கட்டுப்படுத்தவும். காதல் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்வதால் மகிழ்ச்சி அண்ணா. தம்பதிகளாக சிறிய பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். இடுப்பு தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். என்று உங்கள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிடலும், கவனமிக்க செயல்பாடும் தேவைப்படும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று அவசர முடிவு எடுப்பது அல்லது செயல்படுவது உங்களுடைய நம்பகத்தன்மையை சிதைக்கும். அதனால் எதிலும் நிதானத்தை கடைபிடிக்கவும். பணம் தொடர்பான விஷயங்களில் முழு கவனம் தேவை. புதிய பொறுப்புக்களை ஏற்பதற்கு முன் பண பரிவர்த்தனைகளை கவனமாக சரி பார்க்கவும். இன்று புதிதாக கடன் வாங்குவது அல்லது அவசரப்பட்டு பெரிய பொருள் வாங்குவதை தவிர்க்கவும். முடிவு எடுப்பது மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வணிகக் கூட்டணி, ஒப்பந்தங்கள், குழு விவாதங்கள் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய யோசனை தெளிவாக விளக்குவது நன்மை தரும். என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி சாத்தியப்படும். யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்து உங்கள் செயலில் கவனம் செலுத்தவும். கூட்டு வருமானத் திட்டங்கள், நிதிநிலை சார்ந்த நிபந்தனைகளை சரி பார்க்கவும். இன்று உங்களுடைய காதல் அல்லது திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வதால் உங்களுடைய உறவு மேம்படும். சில விஷயங்களுக்கான தீர்வு கண்டுபிடிப்பது உங்கள் உறவில் நெருக்கத்தை வளர்க்கும். இன்று சரியான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர்கள்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உள்ள தேங்கிய வேலைகளை முடிக்க முடியும். உங்கள் நிதி நிலையை ஒழுங்குபடுத்துவதற்கு சரியான வரவு செலவு திட்டங்களை தயாரிக்கவும். இன்று உங்களுக்கு பணி அழுத்தம் உடல் நலனுக்கு தொந்தரவு தரலாம். உங்களுடைய பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது சிக்கலை தீர்க்க உதவும்.

 

சிக்கலான ஒப்பந்தங்கள் அல்லது முதலீடு தொடர்பான விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். மேலும் நிதி சார்ந்த விஷயங்களில் இன்று உங்கள் துணையுடனும், வல்லுனர்களிடமும் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. காதல் விஷயத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அக்கறை மிக்க உரையாடல் காதலை வளர்க்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று புதிய அக்கப்பூர்வமான யோசனை உங்களுடைய வேலை, தொழிலுக்கு ஊக்கத்தை தரக்கூடியதாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை கவனமாக முடிக்க திட்டமிடவும். இன்று மூத்தவர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும். இனிய பேச்சு, நிதான செயல்பாடு உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று தரும். அக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே செலவிடவும். முதலீடுகளை மறுப்பரிசீலனை செய்ய வேண்டிய நாள். தேவையற்ற ஆடம்பரங்கள், வெளித்தோற்ற பராமரிப்பை தவிர்க்கவும்.இன்று காதல் தொடர்பாக மனதிற்கு இதமான நாளாக இருக்கும். தம்பதிகள் ஆக்கபூர்வமான விஷயங்கள் ஈடுபடுவார்கள். இன்று காரமான உணவுகளை தவிர்க்கவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலைகளை ஒழுங்கமைப்பது, திட்டமிடுவது போன்ற விஷயங்களுக்கு உகந்த நாள். இன்று உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்வதோடு, வேலை தொடர்பான விவரங்களை, பிழைகளை கண்டறிவீர்கள். இன்று பணியிடத்தில் சாக ஊழியர்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டுவதால் விமர்சனங்கள் ஏற்படலாம். நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. குறிப்பாக அபாயகரமான சந்தை நகர்வு கொண்ட முதலீடுகளை இன்று தவிர்க்கவும். வாகன பராமரிப்பு, சொத்து வாங்குவது, வீட்டு செலவுகள் என பணம் தொடர்பாக தொந்தரவு தரக்கூடிய நாளாக இருக்கும். காதல் விஷயத்தில் உணர்வுபூர்வமாக உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வணிக ரீதியான முயற்சிகள் மற்றும் தகவல் தொடர்பு திறன் போன்ற விஷயங்களில் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று ஒப்பந்தங்கள் பெறுவதற்கான முயற்சிகள், பேச்சு வார்த்தைகள் போன்ற விஷயங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். உங்களுடைய ராஜதந்திர அணுகுமுறை பிறரிடம் உள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த உதவும்.

 

ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இன்று உங்களுடைய உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிப்பதும், நிதி ஒழுக்கத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியானதாக இருக்கும். புதிய உங்கள் மனிதருக்கு நிம்மதியை கொண்டு வரும். சமுகத்தில் உங்களுக்கு அனுமதிப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் வாக்குவாதங்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து நீண்ட கால லட்சயதிக்காக உழைக்கவும். இன்று பொதுவெளியில் உங்களை நிரூபிப்பதை விட, சரியான நேரத்தை பணிகளை முடிக்கும் முயற்சிக்கவும். தேவையற்ற அனுமானங்களின் பெயரில் செயல்பட வேண்டாம். இன்று பணத்தை சேமிப்பதிலும், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தவும். சில இடங்களில் பணத்தை முதலீடு செய்யும் போது அதற்கான நிபந்தனைகளை கவனமாக படிக்கவும். தங்களுடைய செயலில் நிதானத்தையும், நிதி சார்ந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்படவும். உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக தொலைநோக்குப் பார்வையுடன், தன்னம்பிக்கையும், முன்முயற்சியுடன் செயல்பட வேண்டிய நாள். கடினமான சூழலை சமாளிக்க உங்களுடைய அனுபவம் உதவும். உங்களுடைய எதிர்கால வருமான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் உணர்வீர்கள். உற்சாகமான மனநிலையில் வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்கவும். இன்று சமூகப் பணி அல்லது தொழில் முறை கூட்டத்தில் பங்கேற்பீர்கள். இன்று உங்கள் உடலை அமைதியாக, பதற்றம் இல்லாமல் வைத்திருக்கவும். இன்று உத்வேகமான மனநிலையும், உற்சாகத்துடனும் செயல்படுவது நல்லது.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக செயல்படுவதன் மூலம் அதிகமாக சாதிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட திட்டமிடல், செயலை கையாளும் விதம், ரகசியங்களை காப்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றத்தை தரும். நிதிநிலை சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கை அணுகுமுறை தேவை. எதிர்கால தேவையை மனதில் வைத்து வரவு செலவு திட்டமிடவும். நிதி சிக்கல் உள்ள முதலீடு அல்லது பெரிய நிதி ஒப்பந்தங்களை தவிர்ப்பது நன்மை தரும். இன்று உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். இன்று அதிக உணவு உண்பதை தவிர்க்கவும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, தொழில் தொடர்பாக குழுவாக செயல்படுவது உங்களுக்கு உந்துதலை தரும். பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது வணிக தொடர்புகள் மூலம் சில பயனுள்ள விஷயங்கள் நடக்கும். இன்று உங்களுடைய தலைமைத்துவ திறன் வெளிப்படும். முதலீடு மற்றும் புதிய வருமான யோசனைகளில் கவர்ச்சிகரமான திட்டங்களை கவனமாக அணுகவும். இன்று உங்களுடைய பொருளாதார நிலை தொடர்பாக சமூக அழுத்தம் மனதை பாதிக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு காதல் அல்லது நல்ல வரன் அமைய வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் உடல் நலனை மேம்படுத்தும் உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, தொழில் தொடர்பாக உங்களுக்கான புதிய பொறுப்புக்கள், அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு வேலையை வேகமாக முடிக்க உதவும். இன்று அனுபவசாலிகள் அல்லது உங்கள் நண்பர்களை சந்திப்பதன் மூலம் சில புதிய வாய்ப்புகளை கிடைக்க பெறுவீர்கள். இன்று உங்கள் கடமைகளை முடிப்பதற்கான திட்டமிடல் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நாள். விரைவான ஆதாயங்களை பெறும் நோக்கில் முதலீடு அல்லது கடன் பெறுவதை தவிர்க்கவும். காதல் விஷயத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையுடன் இணக்கமான சூழல் உருவாகும்.