இன்றைய ராசி பலன் 13 செப்டம்பர் 2026
மேஷ ராசி பலன்
![]()
மேஷ ராசி அன்பர்களுக்கு நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருக்க கூடிய பணிகளை முடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய புத்திசாலித்தனமான செயல்பாடு பாராட்டை பெற்று தரும். வழக்கமான வேலைகளை முடிப்பதில் சில அவசரநிலை ஏற்படலாம். இன்று பிறருக்கு கடன் கொடுப்பதியோ அல்லது அவசர நிதி முடிவுகள் எடுப்பது தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதிய இடையே பரஸ்பர ஒத்துழைப்பு இருக்கும். இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எளிதாக ஜீரணமாக கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
ரிஷப ராசி பலன்
![]()
ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதுமையான சிந்தனையும் திட்டமிடலும் உங்களுக்கு கை கொடுக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். முறையான திட்ட அறிக்கையை தயங்காமல் சமர்ப்பிக்கவும். இது பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பை உயர்த்தும். செலவுகளை தவிர்த்து நீண்ட கால சேமிப்பு அல்லது சொத்து சார்ந்த திட்டங்களுக்கு முன்னிறுமை அளிக்கவும். இன்று உங்கள் குடும்பத்தில் பிள்ளைகளுடன் விளையாட நேரம் ஒதுக்கவும். இன்று உடல் நலம் தொடர்பான சில தகவல்கள் ஏற்படலாம். குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வலி தொந்தரவு தரும்.
மிதுன ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக எந்த ஒரு பணியையும் செய்ய நல்ல பலனை தரும். வீட்டில் இருந்து பணி புரியக்கூடிய நண்பர்கள் வேலையை முடிப்பதில் கூடுதல் கவனமும் செலுத்தவும். அலுவலகத்தில் எந்தவித விவாதங்களிலும் தலையிட வேண்டாம். வீட்டு பராமரிப்பு அல்லது குடும்ப தேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இன்று உங்கள் வீட்டை சுத்தப்படுத்துவது, ஒழுங்குபடுத்துவது தொடர்பாக குடும்பத்தில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். தம்பதியர் பழைய சண்டைகளை, கருத்து வேறுபாடுகளை தவிர்த்து செயல்படுவது நல்லது.
கடக ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு உங்கள் பேச்சுத் திறன் சாதக பலனை பெற்று தரும். தொழில் தொடர்பாக வாடிக்கையாளர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவ வாய்ப்பு உண்டு. இன்று நிதி நிலை மற்றும் முதலீடு தொடர்பாக குறுகிய கால திட்டங்களை தவிர்த்து நீண்ட காலத்திற்கு யோசித்து செயல்படவும். சகோதரர் மற்றும் அண்டை வீட்டாரின் உதவி கிடைக்கும். நீங்கள் அதிக நேரம் கணினித்திரையை பார்ப்பது அல்லது மொபைல் சிறையை பார்ப்பது தவிர்க்கவும். கண் சோர்வு தொடர்பான பாதிப்புகள் உங்களுக்கு தொந்தரவு தரும். என்ற நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள தவறாதீர்கள்.
சிம்ம ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு உங்களுடைய திட்டங்கள் சரியான பலனை தரக்கூடியதாக அமையும். வேலை தொடர்பான விஷயங்களில் நெகிழ்வு தன்மையுடன் செயல்படவும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். இன்று உங்கள் உறவினர்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவீர்கள். உங்கள் துணையிடம் நேரம் செலவிடுவதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது நெருக்கத்தை அதிகரிக்கும். குடும்ப விவகாரத்தில் வெளிப்படையான பேச்சு மற்றும் நிதானமான செலவு செய்வதில் கவனம் தேவை.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு சந்திரன் மற்றும் புதன் சாதகமாக இருப்பதால் உங்களுடைய செயல் மற்றும் சிந்தனையில் தெளிவும், தலைமைத்துவமும் நிறைந்திருக்கும். குழுவாக செயல்படுவதில்லை உள்ள பிரச்சினைகள் தீரும். நிர்வாக துறையில் உள்ள பிள்ளைகளை சரி செய்வதில் சிறந்து விளங்குபவர்கள். ஆலோசனைக் கூட்டங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் தவிர்ப்பது உங்கள் குடும்ப பட்ஜெட் விஷயத்தில் நிம்மதி தரும்.காதல் உறவில் உங்களுடைய இனிமையான பேச்சு, உற்சாகமான செயல்பாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். உறவில் இணக்கத்தை உண்டாக்கும். மனதை அமைதியாக வைத்திருப்பது ஆற்றலைத் தக்கவைக்கும்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு உங்களுடைய தனித்துவமான செயல்பாடு சிறப்பான பலனை தரும். அலுவலக வதந்திகளிடமிருந்து விலகி இருக்கவும். இன்று ஆவணங்களை பராமரிப்பது, வேலையை சரியான நேரத்தை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத பயணங்கள் அல்லது மருத்துவ செலவுகள் நாங்கள் நிதி நிலை தொடர்பாக தொந்தரவு தரும். காதல் அல்லது திருமணம் வாழ்க்கையில் உங்கள் துணையிடம் வெளிப்படையாக சில விஷயங்கள் பேசுவது மனக்கசப்பை தீர்க்கும். உங்களுடைய கால் மற்றும் பாதம் தொடர்பான சோர்வு அதிகரிக்கும். இன்று வீண் சலசலப்புகளில் இருந்து விலகி உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும்.
விருச்சிக ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்களுடைய தொழில் தொடர்பான விஷயங்களில் குழுவாக செயல்பட்டால் இலக்குகளை விரைவாக அடைய உதவும். செல்வாக்கு மிக்க நபர்கள் அல்லது சக ஊழியர்கள் ஆதரவு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம். பழைய முதலீடுகள் அல்லது வரவேண்டிய பணம் வசூலாக வாய்ப்புகள் உண்டு. நீண்ட கால நிதி இலக்குகளை திட்டமிடவும். தனிப்பட்ட பிரச்சனைகளில் நண்பர்கள் அல்லது சகோதரர்களின் கருத்து பயனுள்ளதாக இருக்கும். இன்று உடல் நலனை பேணிப் பார்க்க போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க தவறாதீர்கள்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் தேடி வரும். பணியிடத்தில் மேலதிகாரிகள் அல்லது வாடிக்கையாளர்கள் முன்னிலையில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலையை துல்லியமாக முடிக்க சரியான திட்டமிடலுடன் செயல்படவும். பதவி உயர்வு அல்லது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைப்பது போன்ற நல்ல விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். பணியிடத்தில் பதற்றத்தை தவிர்க்கவும். குடும்பத்தினருக்காக அல்லது காதல் துணையுடன் நேரம் சில விட திட்டமிடமும். இன்று எளிய உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்.
மகர ராசி பலன்
![]()
மகர ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இன்று சட்டம், எழுத்து துறை, கல்வித்துறை போன்ற விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடிய நாள். சரியான திட்டங்களுடன், அனுபவிக்க நபர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை தரும். விரைவான லாபம் ஈட்டுவதில் அக்கறை கொள்ளாமல் அறிவு மற்றும் உங்கள் புதிய கிரகங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தவும். குடும்ப விவகாரத்தில் பெரியவர்களின் ஆலோசனை நல்ல வழிகாட்டுதலாக அமையும். குடும்பத்தினருடன் சேர்ந்து புதிய இடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் உடல் நலனை சீராக வைத்துக் கொள்ளவும். உடல் சூடு தொடர்பான தொந்தரவுகள் பிரச்சனையை தரலாம்.
கும்ப ராசி பலன்
![]()
கும்ப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இந்த ஒரு முக்கியமான விஷயங்களிலும் ஆழமான சிந்தனைக்கு பின்னர் முடிவு எடுக்கவும். சிக்கலான பணிகளை முடிப்பதில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். இன்று அவசரப்பட்டு புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். காப்பீடு, கடன் விவகாரங்கள் தொடர்பாக சிந்தனை உடன் செயல்படவும். இன்று உங்கள் துணையின் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக பேசி சரி செய்ய முயலவும். ஒரே வெளிப்படை தன்மை பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் உடலை நீரேற்றுடன் வைத்திருக்கவும்.
மீன ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு கூட்டுத் தொழில் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திப்புக்கு உகந்த நாள். நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் சிந்தித்து செயல்படுவது கருத்து வேறுபாடுகளை தீர்க்க உதவும். ஒப்பந்தங்கள் தொடர்பாக தெளிவாக செயல்படுவது நன்மை தரும். இன்று உங்கள் உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நாள். முதுகு வலி தொடர்பான தொந்தரவு ஏற்படும். பணியிடத்திலும், குடும்பத்திலும் கூட்டு முயற்சி உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிலும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவது நல்லது.