ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை மைத்ரேயிக்கு எதிராக பேரினவாத இணையத் தாக்குதல்
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்ற பெண்ணின் பெயர் மாறியுள்ளது.
இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட கனேடிய நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது அடையாளம் தொடர்பில் தெரிவித்த கருத்துகளே தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது எனலாம்.
மைத்ரேயி ராமகிருஷ்ணன் கனடாவில் பிறந்த ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு நடிகையாவார்.
நெட்பிலிக்ஸின் இன் பிரபலமான நகைச்சுவைத் தொடரான Never Have I Ever இல் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் கவனம் பெற்றார்.
இந்தநிலையில், மைத்ரேயி ராமகிருஷ்ணன் வழங்கியதாகக் கூறப்படும் நேர்காணல்களில், தனது இன மற்றும் கலாச்சார அடையாளம் குறித்து வெளிப்படையாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னை ஈழத் தமிழ் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வதாக அவர் நேர்காணலொன்றில் குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...