மடு தேவாலயத்திற்கு இரவு நேரம் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மடு தேவாலயத்திற்கு இரவு நேரம் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி மடு சந்தியில் இருந்து மடு தேவாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நன்கு வளர்ந்த இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடி வருவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுத்தை புலிகள் நடமாட்டம் தொடர்பாக காணொளிகளும் வெளியாகி உள்ளது. 

கடந்த சில தினங்களாக மடு சந்தியில் இருந்து மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதிக்கருகில் காணப்படும் இந்த சிறுத்தை புலிகள் மனித நடமாட்டத்தை கண்டு அச்சமின்றி காணப்படுவதாகவும் வாகனங்களுக்கு அருகிலும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இரவுநேரங்களில் செல்வோர் மிகுந்த அவதானம்

எனவே இரவு நேரங்களில் மடுத்திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள், பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நேரில் கண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடு தேவாலயத்திற்கு இரவு நேரம் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Leopard Sightings Main Road Madhu Church At Night

தேவையற்ற வகையில் வாகனங்களை நிறுத்தி சிறுத்தைகளைப் பார்ப்பதையோ புகைப்படம், காணொளி எடுப்பதற்காக அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.