தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்த காதலன் ; வீடு தேடி சென்றுகாதலி நடத்திய கொடூரம் சம்பவம்

தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்த காதலன் ; வீடு தேடி சென்றுகாதலி நடத்திய கொடூரம் சம்பவம்

சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீண்ட காலமாக காதலித்து வந்த இருவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காதலன் தனது செல்போன் எண்ணை பிளாக் செய்ததாக தெரிகிறது.

தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்த காதலன் ; வீடு தேடி சென்றுகாதலி நடத்திய கொடூரம் சம்பவம் | Lover Blocks Phone Number

இதனால் மன உளைச்சலுக்கும் கடும் கோபத்திற்கும் உள்ளான காதலி, காதலன் தன்னை விட்டு வேறு பெண்ணுடன் பழகுவதாக கருதி இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.