
பெரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! கனடா பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் அனைவரும் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்கார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களில், அமெரிக்காவில் நடப்பதை நாங்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம். அவர்களின் குரல்களை கேட்பதற்கான நேரம்” என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.