பலத்த காற்று காரணமாக பல வீடுகள் சேதம்
பொலன்னறுவை மாவட்டத்தின் பல பாகங்களிலும் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்துள்ள நிலையில், வீடுகளின் கூரைகளும் சேதடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.