உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு..!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு..!

கொவிட்-19 காரணமாக மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதற்கான அவதானம் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இந்தநிலை தொடருமாயின் கொவிட்-19 தொற்றை விடவும் அதிக உயிரிழப்புகள் மலேரியா காரணமாக பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் மலேரியா காரணமாக 4 லட்சத்து 9 ஆயிரத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றில் அதிகளவான உயிரிழப்புகள் ஆப்பிரிக்க நாடுகளிலேயே பதிவாகியுள்ளன.

அத்துடன் கடந்த ஆண்டு மாத்திரம் 229 பேருக்கு மலேரியா நோய் காணப்பட்டதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.