
உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் லாகூர் முதலிடத்தில்- கொழும்பு நகருக்கு இத்தனையாவது இடமா..?
பாகிஸ்தானின் கலாசார நகரமாக கருதப்படும் லாகூர் நகரமானது, உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது
அமெரிக்காவின் காற்றின் தரக்குறியீட்டின் அடிப்படையில் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான் தலைநகரான கராச்சியும் குறியீட்டில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் நேபாளத்தின் காத்மண்டு நகர் 17ஆவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையின் கொழும்பு நகர் 612ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கொழும்பு நகரில் காற்று மாசுபாடு குறைவு என்பதன் பிரதிபலிப்பாகும்.