
அமெரிக்காவில் நேற்றைய தினம் மாத்திரம் 238 பேர் பலி..!
அமெரிக்காவில் நேற்றைய தினம் கொவிட்-19 காரணமாக ஆயிரத்து 238 பேர் மரணித்தனர்.
அத்துடன் அமெரிக்காவில் மேலும் 161,568 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அமெரிக்காவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளதோடு 2 லட்சத்து 74 ஆயிரத்து 332 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவை தொடர்ந்து நேற்று அதிகளவான உயிரழப்புகள் இத்தாலியில் பதிவாகியுள்ளன.
இதன்படி, இத்தாலியில் நேற்றைய தினம் கொவிட்-19 காரணமாக 672 பேர் மரணித்தனர்
அத்துடன் இந்தியாவில் 482 பேரும், பிரான்ஸில் 402 பேரும், ரஷ்யாவில் 368 பேரும் மரணித்ததாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதற்கமைய சர்வதேச ரீதியில் இதுவரையில் 6 கோடியே 35 லட்சத்து 89 ஆயிரத்து 725 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் சர்வதேச ரீதியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 926 உயிழிப்புகளும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 723 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.