
ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்ஷன் பக்ரிசெடேவின் படுகொலைக்கு இலங்கை கண்டனம்
ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்ஷன் பக்ரிசெடேவின் படுகொலைக்கு இலங்கை தமது கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மற்றும் அனைத்துவகையான மனிதாபிமானத்துக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளையும் அரசாங்கம் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.