கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 10,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 10,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கடந்த ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 10,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை இரட்டை கொத்தணிகளில் இதுவரையில் 21,861 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் இலங்கையில் இதுவரையில் கொவிட்19 நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,410 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 6,982 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றால் 2 மரணங்கள் பதிவாகியுள்ளன

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 487 பேர் நேற்று குணமடைந்தமையை அடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18,000 ஐ கடந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18,304 ஆக அதிகரித்துள்ளது.