
வௌ்ளை மாளிகையின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து பெண்
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழரான ரோஹினி கொஸக்லு அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.
மூன்று பிள்ளைகளின் தாயாரான ரோஹிணி கொஸக்லு திருமணமாக முன்னர் ரோஹிணி லக்ஸ்மி ரவீந்திரன் என அழைக்கப்பட்டிருந்தார்.
ரோஹினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.