பதவியேற்பு விழா தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

பதவியேற்பு விழா தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

தமது பதவி ஏற்பு விழா, அதிகளவான மக்கள் இன்றி இடம்பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு தமது அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்காவிலுள்ள மக்கள் தமது வீடுகளிலும் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் நேற்றைய தினம் 2,718 பேர் மரணித்ததோடு 2 லட்சத்து 35,272 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 72,535 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் 2 லட்சத்து 85,550 கொவிட் மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.