கோர விபத்தில் 17 சுற்றுலாப் பயணிகள் பலி

கோர விபத்தில் 17 சுற்றுலாப் பயணிகள் பலி

பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தின் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.