
கொரோனாவால் 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக் கும் அதிகமாக இருக்கும் என ஐ.நா. சபை மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரஸ் பரவலை தடுக்க உலகமெங்கும் ஊரடங்கு, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதித்துள்ளது.
இந்த தருணத்தில், ஐ.நா. சபை மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு நடந்து முடிந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கொரோனாவின் கடுமையான நீண்டகால விளைவுகள், கூடுதலாக 20 கோடியே 70 லட்சம்பேரை கொடிய வறுமையில் தள்ளிவிடும். இதன் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக் கும் அதிகமாக இருக்கும்.
* கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
* வறுமைக்கு கொரோனா ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் தலைவர்கள் எடுக்கிற முடிவுகள், உலகை மிகவும் மாறுப்பட்ட திசைகளில் கொண்டு செல்லக்கூடும்.
* நிலையான வளர்ச்சி இலக்குகள், 14 கோடியே 60 லட்சம் பேரை தீவிர வறுமையில் இருந்து வெளியேற்றும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.