டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணிக்கு கொரோனா..!

டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணிக்கு கொரோனா..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக சட்டத்தரணியான ரூடி கியுலானிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

76 வயதான அவர் வொசிங்கடனில் உள்ள மெட்ஸ்ட்டர் ஜொர்ஜ்டவுன் பல்கலைகழக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்

இதற்கு ரூடி கியுலானி தான் தற்போது குணமடைந்து வருவதாகவும், தான் விரைவில் நலம் பெறுவதற்கு பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.