கடந்த 11 மாதங்களில் இந்தியாவுக்கு சீனாவின் ஏற்றுமதி சரிவு

கடந்த 11 மாதங்களில் இந்தியாவுக்கு சீனாவின் ஏற்றுமதி 13 சதவீதம் குறைந்திருக்கிறது.

இந்தியாவும், சீனாவும் பரஸ்பர வர்த்தக தொடர்புகளை நீண்டகாலமாக பேணி வருகின்றன. இதில் கடந்த ஆண்டு இரு நாடுகளும் 92.68 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6.76 லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன.

 


எனினும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சீனாவின் ஏற்றுமதி 13 சதவீதம் குறைந்திருக்கிறது. அதாவது கடந்த 11 மாதங்களில் 59 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ளது.

அதேநேரம் இந்தியாவோ கடந்த 11 மாதங்களில் 19 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது 16 சதவீதம் அதிகம் ஆகும். அந்தவகையில் இரு நாடுகளுக்கு இடையே 78 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக சீன சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

லடாக் மோதல் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையிலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சுமுகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.