வேகமாக பரவுகிறது கொரோனா -முற்றாக முடக்கப்பட்டது நெதர்லாந்து

வேகமாக பரவுகிறது கொரோனா -முற்றாக முடக்கப்பட்டது நெதர்லாந்து

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து நெதர்லாந்து இன்று (15) முதல் ஐந்து வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக கார்டியன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு இன்று (15) முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரை முடக்கப்படுமென நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.

அதன்படி, அனைத்து பாடசாலைகளும், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதுடன் அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களும் அடுத்த மார்ச் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஜேர்மன், இத்தாலி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பருவங்களுக்கான பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.