பிரான்ஸ் அதிபருக்கு தொற்றியது கொரோனா!

பிரான்ஸ் அதிபருக்கு தொற்றியது கொரோனா!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எலிசி அரண்மனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், குடியரசுத் தலைவர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல் அறிகுறிகளின் தொடக்கத்தில் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மானுவேல் மக்ரோன் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் எனவும், கடமைகளை தனிமைப்படுத்தலில் இருந்தவாறே மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.