ஜோ பைடனின் நெருங்கிய ஆலோசகருக்கு கொரோனா

ஜோ பைடனின் நெருங்கிய ஆலோசகருக்கு கொரோனா

அமெரிக்க அதிபராக தெரிவாகியுள்ள ஜோ பைடனின் மிக நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான செட்ரிக் ரிச்மண்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லூசியாணா மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான செட்ரிக் ரிச்மண்ட், ஜோ பைடனின் புதிய அரசாங்கத்தில் முதுநிலை ஆலோசகர் பதவியை பொறுப்பேற்பதற்காக தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜோர்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற செனட் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, திரும்பிய அவருக்கு இரு நாட்களுக்குப் பின் தொற்று உறுதியாகியுள்ளது.

இருப்பினும் ஜோ பைடனை ரிச்மண்ட் அண்மையில் நேரில் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பதும் உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.