கொரோனா தொற்று அதிகரிப்பு – பிரித்தானியாவிற்கான விமானங்களைத் தடை செய்யும் நெதர்லாந்து

கொரோனா தொற்று அதிகரிப்பு – பிரித்தானியாவிற்கான விமானங்களைத் தடை செய்யும் நெதர்லாந்து

பிரித்தானியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து சேவையில் ஈடுபடும் பயணிகள் விமானதிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க நெதர்லாந்து திட்டமிட்டுள்ளது.

அதன்படி குறித்த தடையானது எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி வரை பயணத் தடை அமுலில் இருக்கும் என அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதாகவும், பிற போக்குவரத்து முறைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் அரசாங்ககம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு பிரித்தானியாவில் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ் 70% வரை தொற்றுநோயாக இருப்பதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் விஞ்ஞானிகள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்று அடுக்கு விதிமுறைகளில் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கும் லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து ஆகியவை இப்போது புதிய அடுக்கு 4 மட்டத்தில் வைக்கப்படும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறினார்.