சிட்னியின் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று: எல்லை கட்டுப்பாடுகளுடன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது

சிட்னியின் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று: எல்லை கட்டுப்பாடுகளுடன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது

சிட்னியின் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சமுக விலகல் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் பல மாநிலங்கள் எல்லைகளை மூடுவதற்கும் அங்கு வசிப்பவர்களை தனிமைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அண்டை மாநிலமான விக்டோரியா சிட்னியியுடனான எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.

தெற்கு அவுஸ்ரேலியா மாநிலமும் இன்று முதல் சிட்னியில் இருந்து வரும் அனைவரையும் 14 நாள் தனிமைப்படுத்தவும் பாதிக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாட்டினையும் அறிவித்துள்ளது.

டாஸ்மேனியாவும் நேற்று இதேபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ள அதே நேரத்தில் மேற்கு அவுஸ்ரேலியா மாநிலம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனது எல்லையை மூடியுள்ளது.

சிட்னியின் மற்ற பகுதிகளிலும் 10 பேர் மட்டுமே ஒன்று கூட முடியும் என்றும் விருந்தோம்பல் அரங்குகள் 300 க்கு உட்பட்டவர்கள் ஒன்று கூட முடியும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் அறிவித்துள்ளார்.