போடா போடி 2-ம் பாகம் உருவாகிறது.... சிம்புவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் அறிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் ‘போடா போடி’. சிம்பு நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார். 2012-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பதம் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.

 

இந்நிலையில், போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் சிம்புவே அப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க உள்ளாராம். 

 

சிம்பு, ரித்திகா பால்

 

முதல் பாகத்தை போன்றே இந்த படமும் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட உள்ளதாகவும் அடுத்தாண்டு மே மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். ‘போடா போடி 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை எனக்கூறி உள்ள பதம் குமார், அது முதல் பாகத்தை இணைக்கும் ஒரு கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.