
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம்
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று மரணமடைந்தார்.
மஞ்சள் காமாலை, நீர்சத்து குறைவு மற்றும் இரத்த அழுத்தக் கோளாறு காரணமாக அவர் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், படப்பிடிப்பு நடுவில் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி மற்றும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரையிலிருந்து தொடங்கி, பல வெற்றிப் படங்களில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.