சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த வேன்
தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியிலுள்ள திகம்பதஹ பகுதியில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, வேனின் சாரதி காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (09) இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதான, தம்புள்ளை மற்றும் தனமல்வில பகுதியில் வசிப்பவர்கள்.
மேலும் திகம்பதஹ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.