
இங்கிலாந்து விமானசேவைக்கு விதிக்கப்பட்டது தடை
பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை அடுத்து நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளன.
இதன்படி ஜனவரி 1 ஆம் திகதி வரை பயணத் தடை அமுலில் இருக்கும் என்று நெதர்லாந்து அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரிட்டனில் கொரோனா தொற்று தொடர்பான முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதாகவும், பிற போக்குவரத்து முறைகள் தொடர்பான கூடுதல் நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிய தொற்றை அடுத்து பெல்ஜியம் இன்று இரவு 11 மணி முதல் பிரிட்டனில் இருந்து விமானம் மற்றும் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.