தாய்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல்!

தாய்லாந்தில் மீண்டும் கொரோனா பரவல்!

தாய்லாந்தில் கொவிட்-19 பரவல் மீண்டும் தீவிரமாக பரவி வருகின்றது.

தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கிற்கு அருகில் உள்ள கடல் உணவு சந்தையில் கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் இவ்வாறு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தையில் கடந்த வியாழக்கிழமை பெண்ணொருவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையையடுத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் அதன் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவிற்கு வெளியே கொவிட் 19 பரவல் ஏற்பட்ட இரண்டாவது நாடாக தாய்லாந்து பதிவானது.

எனினும் அந்த நாடு, கொவிட் 19 முதலாம் அலையை 4 ஆயிரம் கொவிட் 19 நோயாளர்கள் மற்றும் 60 மரணங்களுடன் கட்டுப்படுத்தியிருந்தது.

எனினும் தற்போது கடல் உணவு சந்தையால் மீண்டும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் முதலாவதாக தொற்றுறுதியான பெண்ணுக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.