
அவுஸ்ரேலியாவின் சிட்னி வாழ் மக்கள் பிற மாகாணங்களுக்கு செல்ல தடை
அவுஸ்ரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் பிற மாகாணங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் வசிப்பவர்கள் அனைத்து அவுஸ்ரேலிய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களிலும் இருந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமை, சிட்னியில் 30 கொவிட் -19 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன.
அந்த தொகை தற்போது 68 நோயாளிகளாக உயர்ந்துள்ளது. எனினும் இந்த புதிய தொற்று எவ்வாறு பரவியதென இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் பிரிட்டனில் இருந்து அறிவிக்கப்பட்ட புதிய கொவிட் -19 திரிபு அவுஸ்ரேலியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வட கடற்கரையில் வசிப்பவர்கள் புதன்கிழமை நள்ளிரவு வரை தங்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.