
பிரித்தானியாவிற்கான பயணத்தடையை விதித்துள்ள நாடுகள்..!
40 இற்கும் அதிகமான நாடுகள் பிரித்தானியாவுக்கான பயணத் தடைகளை வித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் புதிய உருமாறுபாட்டின் தாக்கம் தொடர்பில் சர்வதேச ரீதியிலான எச்சரிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் ஒரு பொதுவான கொள்கையை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் பிரித்தானியாவிலிருந்து பயணிகளின் வருகையை தடை செய்துள்ளன.
புதிய வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என்றபோது, அது மிகவும் ஆபத்தானது என்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.