வெடித்துச் சிதறியது எரிமலை -வைரலாகும் புகைப்படங்கள்

வெடித்துச் சிதறியது எரிமலை -வைரலாகும் புகைப்படங்கள்

 

அமெரிக்காவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை அண்மையில் வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து வெளியேறிய லாவா சிதறல்கள் சுமார் 165 அடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டன.

அத்துடன் வெடித்துச் சிதறிய லாவா அடிவாரத்தில் உள்ள ஒரு குளத்தில் சென்று சேர்ந்தது. இதனால் அப்பகுதியில் 4 புள்ளி 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

இந்நிலையில் இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.