நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தளை , பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணியின் பின்னர், இடைக்கிடையே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக கந்தப்பளை - கொன்கோடியா மத்திய பிரிவுக்கு உட்பட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் சுமார் 10 வருட காலமாக மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர்.