இன்றைய ராசி பலன்கள் 24/12/2020

இன்றைய ராசி பலன்கள் 24/12/2020

மேஷம்

முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். எதிர்பாராத லாபம் உண்டு.

ரிஷபம்

யோகமான நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்

சரியான ஓய்வு கிடைக்காமல் இருந்த நிலை இப்போது மாறும்.  வீட்டுச்செலவுகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணியாளர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

கடகம்

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.

சிம்மம்

வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

கன்னி

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நேற்றைய பணி இன்றும் தொடரும்.

துலாம்

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். கடிதம் கனிந்த
தகவலைத் தரும்.

விருச்சகம்

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் நன்மை கிட்டும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
ஆரோக்கியம் சீராகும்.

தனுசு

மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கை தேவை. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில்
செய்து முடிக்க இயலாது.

மகரம்

நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம்.

கும்பம்

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில்
அக்கறை காட்டுவது நல்லது.

மீனம்

விரோதங்கள் விலகும் நாள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம்
நீட்டுவர்.