மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 2 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம்

மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 2 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம்

துருக்கியில் 5.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, கிழக்கு துருக்கியில் 2 கி.மீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இதன் மையப்பகுதி சிவ்ரிஸ் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

முன்னதாக 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவித்த ஈ.எம்.எஸ்.சி, பின்னர் அந்த தகவலை திருத்தியமைத்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில் கட்டிடங்கள் சேதமாகியுள்ளது.

எவ்வாறெனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி துருக்கியின் மேற்கு துறைமுக நகரமான இஸ்மிரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகளின் தாக்கம் காரணமாக 116 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.