
யூட்டா 45-வது மாநிலமாக அமெரிக்காவுடன் இணைந்த நாள் (ஜன.4- 1896)
யூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45-வது மாநிலமாக 1896-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி இணைந்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்க அரசுக்கு விலைக்கு விற்றார். * 1854 - கேப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார். * 1878 - சோஃபியா நகரம் ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை
யூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45-வது மாநிலமாக 1896-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி இணைந்தது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்க அரசுக்கு விலைக்கு விற்றார். * 1854 - கேப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார். * 1878 - சோஃபியா நகரம் ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது. * 1884 - ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. * 1889 - இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. * 1912 - பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. * 1951 - சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
* 1958 - 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார். * 1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக்-1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது. * 1959 - லூனா-1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது. * 1990 - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் ரெயில் ஒன்று சரக்கு ரெயிலுடன் மோதியதில் 300 பேர் பலியானார்கள் * 1998 - அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.