கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44774 ஆக அதிகரிப்பு..!

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44774 ஆக அதிகரிப்பு..!

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 403 பேருக்கு கொவிட் 19 நோய் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44774 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 401 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 2 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41031 ஆக உயர்வடைந்துள்ளது.

7309 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 535 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 37 ஆயிரத்து 252 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இதுவரையான காலப்பகுதி வரை கொழும்பு மாவட்டத்தில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 967 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 9322 பேரும், களுத்துறையில் 3030 பேரும் அடையாளம் காணப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.