உலகின் கண்கள் திரும்பி நோக்கும் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க புதையல்

உலகின் கண்கள் திரும்பி நோக்கும் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க புதையல்

கனடாவில் புதிய தங்கம், செம்பு நிறைந்த கனிம இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் Toodoggone எரிமலை வலயம் பகுதியில் உள்ள JOY திட்டத்தில், AuRORA எனப்படும் புதிய தங்கம் மற்றும் செம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் கண்கள் திரும்பி நோக்கும் வகையில் உருவெடுத்து வருகிறது .

இந்த மண்டலம், புகழ்பெற்ற Golden Triangle-இல் இணைந்தாலும், அதிகமாக ஆய்வு செய்யப்படாத பகுதி ஆகும். 2024-ஆம் ஆண்டு முதல் துரிதமாக ஆய்வுகள் நடக்க, Freeport-McMoRan நிறுவனம், 110 மில்லியன் டொலர் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் JOY திட்டத்தில் 70% பங்குகள் பெற்றுக்கொள்ள முடியும். Amarc Resources இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது AuRORA மண்டலம், induced polarization என்ற தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டு, 0.9 மைல் நீளமான மற்றும் 0.3 மைல் அகலமான செம்பு மற்றும் தங்க சுரங்கப் பசுமை பகுதியாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

உலகின் கண்கள் திரும்பி நோக்கும் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க புதையல் | Gold Treasure Discovered Canada

ஒவ்வொரு தொன் கனிமத்தில் 1 கிராம் தங்கம் இருப்பது இந்த கண்டுபிடிப்பை வணிக ரீதியில் லாபகரமாக மாற்றுகிறது. மேலும், Quartz-magnetite veinlets மூலம் chalcopyrite, bornite போன்ற செம்பு கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.