இன்று முதல் நாட்டின் பல பாகங்களிலும் ரெபிட் எண்டிஜென் பாிசோதனை!

இன்று முதல் நாட்டின் பல பாகங்களிலும் ரெபிட் எண்டிஜென் பாிசோதனை!

நாட்டின் பல்வேறு பாகங்களில் இன்று முதல் எழுமாறாக ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடாக பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு உட்பட மேல்மாகாணத்தில் உள்ள மரப்பலகையிலான மீன் விற்பனைக் கூடங்களை அண்மித்த பகுதிகளில் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனை மேலும் விரிவுபடுத்தி, மேல் மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள மரப்பலகையிலான மீன் விற்பனைக் கூடங்கள், மரக்கறி சந்தைகள், வாராந்த சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்களில் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்களது உச்சபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறு காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.

இதேவேளை, முகக்கவசம் அணியாமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் தேதி முதல் குறித்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 172 அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்