
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்
தனது நாட்டு பிரஜைகளை அவமதிப்பு மற்றும் அவமானப்படுத்தும் விதமாக இந்தத் தருணம் அமைந்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இன்று தலைநகரில் நிகழ்ந்த வன்முறைக்கு பதவியிலிருக்கும் ஜனாதிபதியினால் தூண்டப்பட்ட ஆதரவாளர்களே காரணம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
பதவியிலிருக்கும் ஜனாதிபதி இரண்டு மாதங்களுக்கு அதிகமாக தனது ஆதரவாளர்களுக்கு உண்மையை தெரிவிப்பதற்கு அச்சப்படுவதாக பராக் ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளுக்கமைய புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன் இம்மாதம் 20 ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்பதாகவும் குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.