இந்து ஆலயங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கிய பிரதமர்..!

இந்து ஆலயங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கிய பிரதமர்..!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த காசோலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த காசோலைகளை ஆலயங்களுக்கு வழங்குவதனை அடையாளப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளின் ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், ஏனைய ஆலயங்களுக்கு காசோலை வழங்கும் நடவடிக்கை மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் நவராத்திரி தினத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய 50 ஆயிரம் ரூபாய் வீதம் காசோலைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.