கனடாவில் ஈழத் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்; குவியும் வாழ்த்து!

கனடாவில் ஈழத் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்; குவியும் வாழ்த்து!

 கனடாவின் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா (Milany Thiagarajah) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Quebec மாகாணத்தின் நகரசபைத் தேர்தல் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce நகரசபை உறுப்பினராக மிலானி தியாகராஜா (Milany Thiagarajah) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கனடாவில் ஈழத் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்; குவியும் வாழ்த்து! | Jaffna Tamil Mmilany Thiagarajah Quebec Councillor

Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற பெருமையை மிலானி தியாகராஜா  (Milany Thiagarajah) பெறுகிறார்.

Montreal நகரின் முதல்வராக தெரிவான Soraya Martinez Ferrada தலைமையிலான Ensemble Montréal கட்சியின் கீழ் மிலானி தியாகராஜா (Milany Thiagarajah) வெற்றிபெற்றார்.

அதேவேளை ஈழ தமிழ் பெண் (Milany Thiagarajah) ஒருவர் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.